Monday, September 30, 2013

உங்கள் ஈகை எருவாகட்டும், விடுதலை உணர்ச்சி கருவாகட்டும்; தாரணிமீதினில் எம் தாயகம் பிறக்கும் தடுக்க நினைப்பவர்கள் தலைகள் தெறிக்கும்



தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க
ஈழத் தமிழினத்தின் வரலாற்றில் அகிம்சையின் எல்லையைத் தொட்டுவிட்ட தியாக தீபம் திலீபன் அனைத்துத் தமிழர்களின் மனதிலும் தெய்வமாக வாழ்ந்து கொண்டிருப்பவன். அத்தியாக தீபத்தின் 26ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு செப்டெம்பர் 29ஆம் திகதி East ham Trinity Centreஇல் மிகவும் உணர்வு பூர்வமாக மண்டபம் நிறைந்த மக்களுடன் நடந்தேறியது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மக்கள் அனைவரதும் முகங்களிலும் 26 ஆண்டுகளுக்கு முன்னர் நல்லூர் முருகன் முன்றலில் நடந்த வேள்வியில் அன்று கலந்துகொண்ட உணர்வே பிரதிபலித்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

அங்கு இதே மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் சங்கர், கேணல் ராயு அவர்களின் நினைவுப் பகிர்வுடன் அஞ்சலியும் செலுத்தப்பட்டது. மாவீpரர் பெரியதம்பி அவர்களின் புதல்வன் பிரேம் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வடகிழக்குப் பிராந்திய பொறுப்பாளர் பகீர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து மாவீரர் கப்டன் கீரோராஜ் அவர்களின் பெற்றோர் திரு திருமதி சண்முகசுந்தரம் அவர்கள் மாவீரர்களின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து கவிதைகள், சிறப்பு உரைகள், எழுச்சிப் பாடல்கள் என மிக எழுச்சி மிக்கதாக நிகழ்வு அமைந்தது நிகழ்வின் ஆரம்பத்தில் ஏற்றி வைக்கப்பட்ட தேசியக் கொடி இறக்கப்பட்டு தமிழரின் தாரக மந்திரத்துடன் நிகழ்வு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

-நாதன்

No comments:

Post a Comment