Saturday, September 28, 2013

பத்து மணிநேரம் போராடியும் ஆரணி அருகே ஆழ்க்குழாயில் தவறி விழுந்த நான்கு வயது குழந்தை பாரிதாபமாக இறந்தது

பாரிதாபமாக இறந்த குழந்தைக்கு நாம் செங்கீற்றின் சார்பாக ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்பரச்சனையை நாம் மேலோட்டமாக காணக்கூடாது. நாம் அனைவரும் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். இப்பரச்சனை இன்றோ நேற்றோ நடைபெற்று முடிந்துவிடப்போவதில்லை. ஆழ்குழாய் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இது நடைபெற்று வருகிறது.

அங்கு உடனடியாக வந்த அதிகாரிகள் பல மணி நேரம் போராடினார்கள், இருந்தும் மீட்கப்பட்ட குழந்தை இறந்துவிட்டது.

ப்ப்ரச்சனையின் காரணமும் மூலங்களும் இதற்க்கான தீர்வுகளும் என்ன?

  1. அப்பகுதி அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற மெத்தன போக்கே இதற்க்கு முக்கிய காரணம்; அவர்களின் பகுதியை தினமும் கண்காணிப்பதை தவிற அவர்களுக்கு வேறு என்ன வேலையிருக்கிறது?

  2. ஆழ்குழாய் அமைக்கும் நிறுவனங்கள் தண்ணீர் இல்லையெனில் இதை உடனடியாக மூட வேண்டும் என்ற முறையை கடைபிடிப்பதில்லை.

  3. தொடங்கப்பட்டு தண்ணீர் இல்லையெனில் உடனடியாக மூட வேண்டும் என்ற சட்டமும் அப்படி செய்யாதவர்களுக்கும் நிறுவனங்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். தண்டனைகள் அதிகமாக்காமல் தவறுகள் ஒருபோதும் குறையாது.

  4. ஆழ்க்குழாய் அமைத்தால் தான் தண்ணீர் கிடைக்கும் என்ற அவள நிலை இன்று தமிழகத்தில் நிலவுகிறது. நிலத்தடி நீரின் அளவு ஆழ பாதாலதுக்கு சென்றுவிட்டது. இதை அற்ப மானிட பதர்கள் ஒருபோதும் உணர்வதில்லை.

  5. மழைநீரை சேமிப்போம்

  6. நெகிழி குப்பைகளை தவிர்ப்போம்

  7. மரங்களை நடுவோம்

  8. நிலத்தடி நீரை உயர்த்துவோம்-->ஆழ்குலாயை ஒழிப்போம் 


வான்சிறப்பு:

குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.

பரிமேலழகர் உரை:
யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது. ( பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின்,அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை,'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.).

No comments:

Post a Comment