Sunday, September 29, 2013

பி.சி.சி.ஐ என்னும் இந்திய தனியார் நிறுவனம் நடத்தும் கிரிக்கெட் வாரியத்தை முற்றுகையிட்ட தமிழ் மாணவர்களை வாழ்த்துவோம்.

புகைப்படம் புகைப்படம்புகைப்படம்

இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் தொடர்ந்து இந்தியாவில் ஐ.பி.எல் உள்ளிட்ட பல போட்டிகளில் விளையாடி வருகின்றனர். தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கையில் இருந்து எந்த ஆட்டக்காரர்களும் இந்தியாவிற்குள் வந்து விளையாடக் கூடாது என மாணவர்கள் இன்று அடையாரில் நடந்த பி.சி.சி.ஐ கூட்டத்தை முற்றுகையிட்டனர். பார்க் செரட்டன் விடுதியில் இந்த கிரிக்கெட் கூட்டம் நடைபெறுகிறது. மாணவர்கள் விடுதியின் வாசல் வரை சென்று பிசிசிஐ ஒழிக , சீனிவாசன் ஒழிக என முழக்கமிட்டனர். ஏராளமான செய்தியாளர்கள் இந்த நிகழ்வை பதிவு செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய மாணவர்கள், இதற்கு மேலும் பிசிசிஐ நிறுவனம் இலங்கை ஆட்டக்காரர்களை இந்தியாவில் விளையாட அனுமதித்தால் தமிழகத்தில் எந்த பிசிசிஐ நடத்தும் எந்த கிரிக்கெட் போட்டியையும் நடத்த அனுமதியோம், விரட்டி அடிப்போம் என்று பலமாக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். சுமார் 50 மாணவர்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகி உள்ளனர்.

ஆனால் கிரிக்கெட் வாரியமோ எந்த எதிர்ப்பு வந்தாலும் கொஞ்சமும் மானமில்லாமல் இலங்கை ஆட்டக்காரர்களை இந்தியாவில் ஆட அனுமதிக்கிறது என்பது வேதனை.

இனத்திற்காக போராடிய தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பாராட்டுகள். மாணவர் போராட்டம் வெல்லும் !

-இளையவேந்தன்

No comments:

Post a Comment