Thursday, September 19, 2013

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" குரள் ௧௦௩௩ (1033); வேளாண்மை: ஒரு விளக்கம்

// உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர் ////

954816_637653886265172_940875666_n

நன்றி@ ம.பொன்ராஜ் காலாடி

வேளாண்மை: ஒரு விளக்கம்
==============
* வேளாண்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் 'விவசாயம்' என்று நிறைய பேர் நினைத்து இருப்பீர்கள். அது பின்னால் வந்த வழக்காறு. ஆனால், வேளாண்மை'யின் அர்த்தம் இது தான்.

> ஈகை,பரிவு,உபகாரம்,கொடைத்தன்மை,கொடுத்தல்,வள்ளல் தன்மை.
எனவே வேளாண்மை என்றால் 'கொடுத்தல்' என்று அர்த்தம்.

* யார் எதை கொடுத்தார்கள்? அன்று முதல் இன்றும் பல இடங்களில் பண்டமாற்று முறையில் அடிபப்டை பொருள் 'நெல்' போன்ற தானியங்கள் தான். அந்த நெல்லை உற்பத்தி செய்து, அதை பண்டம் மாற்றியும், கொடுத்தும், அந்த நெல் உறுபத்தி செய்த நிலங்களையும் கொடுத்தும் வாழ்ந்தவர்களுக்கு, பிற்காலத்தில் 'வேளாளர்' என்று அழைக்கப்பட்டனர். அதாவது 'கொடுப்பவர்கள்' என்று அர்த்தம். இந்த வேளாளர் என்பது இன்று சொல்லப்படுவது போல சாதி அல்ல. அது ஒரு 'பட்டம்'.

* தமிழில் ஆகு பெயர் என்பது போல, கொடுத்தல் என்பது திரிந்து விவசாயம் என்ற அர்த்தம் அதை செய்பவர்களின் தொழிலை குறிக்க மாறியது.

* பின்பு 'வேள்' என்ற சொல், மண்ணை குறிக்க தொடங்கியது.
வேள் - மண்
வேள் + ஆர் - வேளார் (மண்பாண்டம் செய்பவர்)
வேள் + ஆண்மை - வேளாண்மை (மண்ணை ஆளுதல்)
வேள் + இர் - வேளிர் (குறுநில மன்னர்கள், கடையேழு வள்ளல்கள்)

* சேர,சோழ,பாண்டியன் இவர்களுக்கு உள்ள பட்டங்கள் என ஏகப்பட்ட விஷயங்கள் பெருமை பொங்க சொல்லிக் கொள்ள இருந்தாலும், முன்னாள் முதல்வர் திரு.கருணாந்தி அவர்கள், தனது தெலுங்கு சாதியான 'சின்ன மேளம்' என்பதை 'இசை வேளாளர்' என்றே மாற்றியதில் இருந்து, 'வேளாளர்' என்ற வார்த்தையின் அர்த்தத்தை அவர் எந்த அளவில் உணர்ந்து உள்ளார் என்பது திண்ணம்.

ஆக, உலகின் எந்த நாகரிகத்தை எடுத்துக் கொண்டாலும், அரசு தோற்றம் என்ற ஒன்றின் அடிப்படை 'வேளாண்மை'யாகத் தான் இருக்க முடியும்.

-தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

No comments:

Post a Comment